அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் நேற்று அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது
ஆனால் இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வில்லை. அதுமட்டுமின்றி அதிமுகவை கடுமையாக அக்கட்சியின் எல்.கே.சுதீஷ் விமர்சனம் செய்தார். இதனை அடுத்து அதிமுக தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தேமுதிக நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில் இன்று தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுவதால் தேமுதிகவை அதிமுக கழட்டிவிட்டுள்ளதாக தெரிகிறது