தேர்தலில் போட்டியில்லை. வைகோவின் திடீர் முடிவால் மக்கள் நலக்கூட்டணி அதிர்ச்சி

தேர்தலில் போட்டியில்லை. வைகோவின் திடீர் முடிவால் மக்கள் நலக்கூட்டணி அதிர்ச்சி

vaikoமக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவில்பட்டி தொகுதியின் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த விநாயக் ரமேஷ் என்பவர் கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “சாதி ஓட்டுகளை முன்னிறுத்தி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதன் காரணமாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு நான் நேற்று மாலை அணிவிக்க செல்லும்போது என்னை தடுத்து நிறுத்தினார்கள். இந்தத் தேர்தலில் என்னை மையமாக வைத்து தேவர் – நாயக்கர் இடையே சாதி மோதல் ஏற்படுத்த திமுக சதியில் ஈடுபட்டுள்ளதாக எனக்கு நம்பகத்தன்மையான தகவல் கிடைத்தது.

எனவே சாதி மோதலை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டியில் நான் போட்டியில் இருந்து இருந்து விலகுகிறேன். விநாயக் ரமேஷ் கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார். இருப்பினும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவேன்”

இவ்வாறு வைகோ கூறினார்.

தமாக தலைவர் ஜி.கே.வாசனும் ஏற்கனவே தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது வைகோவும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply