தேர்தல் நடத்தை விதிகள் எப்போது வரை இருக்கும்?

தேர்தல் நடத்தை விதிகள் எப்போது வரை இருக்கும்?

election commissionஇந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஆறுகட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துவிட்டது. மே 19ஆம் தேதி கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனையடுத்து மே 23ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மேலும் தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்துவிட்டாலும், மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்னும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின்னரே அரசு அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply