தேர்தல் நடைபெற்ற இடங்களில் பொங்கல் பரிசு எப்போது?

தேர்தல் நடைபெற்ற இடங்களில் பொங்கல் பரிசு எப்போது?

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துவிட்டதால் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறாத பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக 2,363 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது என்பது தெரிந்ததே.

Leave a Reply