தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை ஆய்வு தொடரும்: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது