தேர்தல் மேடை சரிந்து நூலிழையில் உயிர் தப்பிய முன்னால் முதலமைச்சர்
பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் முன்னாள் முதல்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பீகார் மாநிலத்தில் கயா என்ற தொகுதியில் பீகார் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென மேடை சரிந்தது. ஆனால் இதில் முன்னாள் முதல்வர் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த தொகுதியில் ஏப்ரல் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.