தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்
அடுத்த தேர்தல் வந்துதான் இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்றில்லை, தேர்தல் வராமலேயே விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்து மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்துவிட்டார். ஆனால் ஆட்சியை அசைக்ககூட முடியவில்லை. கடைசியாக அவர் நம்பிய 22 தொகுதி இடைத்தேர்தலும் அவரை காலைவாரிவிட்டது.
அதிமுக தனது முழு ஐந்து ஆண்டு பதவியையும் முடித்துவிடும் என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் வராமலேயே விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்த வழக்கம்போல் கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.