தேர்தல் வருவதால் அமைதிப்பேரணி: தீபா குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று காலை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது.
இதனையடுத்து சற்றுமுன் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதி பேரணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வர குறுகிய காலமே உள்ளதால்தான் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்துகிறார்கள். ஜெயலலிதா வழியை இந்த அரசு சரியாக பின்பற்றவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும். போயஸ் கார்டனை உரிமை கோரும் விவகாரத்தை பொருத்தவரை ஏற்கனவே நீதிமன்றம் சென்றுள்ளேன். சட்டப்போராட்டம் தொடரும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து வருகிறேன்’ என்று கூறினார்.