தேர்வு இல்லாமல் எப்படி பாஸ்? அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கேள்வி

பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் தேர்வு எழுதாமல் எப்படி ஒரு மாணவரை தேர்ச்சி பெற வைக்க முடியும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்ச்சி குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அதற்கு பதில் அளிப்பதாக கூறிய அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அளித்த பேட்டியில் தான் இவ்வாறு கூறியுள்ளார்

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பொருத்தமற்ற செயலை செய்வதாகவும் தேர்வை நடத்துவது தான் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே அரியர் மாணவர்கள் பாஸ் என்பது ரத்து செய்யப்பட்டு விரைவில் தேர்வு வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply