தொகுதிகள் அறிவித்தும் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது ஏன்?
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு நேற்று தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் தொகுதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில நிமிடங்களில் வேட்பாளரையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் மதிமுகவும், விசிகவும் இன்னும் வேட்பாளரையும் அறிவிக்காமால், பிரச்சாரத்திற்கும் செல்லாமல் உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது சின்னம்தான். விசிக, மதிமுக வேட்பாளர்கள் இன்னும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யவில்லை. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களில் போட்டியிடுவதா? என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது
இதேபோல் தினகரன் கட்சி, சரத்குமார் கட்சி, உள்பட ஒருசில கட்சிகள் சின்னம் தெரியாமல் தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது