தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கின்போது சில வாரங்களாக பெட்ரோல் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது

இன்று சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 52 காசு உயர்த்தப்பட்டு, ரூ.78.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று சென்னையில் டீசல் 50 பைசா உயர்ந்து ரூ.71.64க்கு விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply