தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்தார் வரதராஜன்:

அமைச்சர் விஜயபாஸ்கர்

தொலைக்காட்சி நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதராஜன், சமீபத்தில் தனது முகநூலில் ஒரு வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது

அதன் பிறகு அவர் வெளியிட்ட அடுத்த வீடியோவில் தமிழக அரசும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்

இந்த நிலையில் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் தற்போது வரதராஜன் தனது செயலுக்கு தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply