முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
ஸ்காலர்ஷிப் முழு விவரம்
கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது .
நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/
அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தார்கள் என்றால், அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.