தொழுகை நடத்த மசூதி அவசியா? ஓய்வுக்கு முன் தீர்ப்பு சொல்ல இருக்கும் தீபக் மிஸ்ரா

தொழுகை நடத்த மசூதி அவசியா? ஓய்வுக்கு முன் தீர்ப்பு சொல்ல இருக்கும் தீபக் மிஸ்ரா

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் இன்னும் ஒருசில நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் ஒரு முக்கிய வழக்கில் தீர்ப்பு கூறவுள்ளார். அது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதி அவசியமா? என்ற வழக்குதான்

ராமஜென்ம பூமி விவகாரம் குறித்த வழக்கின் கிளை வழக்காக கருதப்படும் இந்த வழக்கில் கடந்த 1994ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இஸ்லாம் மத அடிப்படையில், தொழுகை நடத்துவதற்கும் இஸ்லாமிய மதக் கடமைகளை செய்வதற்கு மசூதி என்பது அவசியமானதா என்பது தொடர்பான அம்சங்களுடன் கூடிய தீர்ப்பை வழங்கின. முஸ்லிம்களுக்கு மசூதி என்பது அவசியமான ஒன்று கிடையாது. முஸ்லிம்கள் எந்த இடத்திலும் எங்கே இருந்தும்கூட, ஏன், திறந்தவெளியில் கூட இவற்றை செய்ய முடியும். இந்த நடைமுறை இந்திய அரசியல் சாசனப்படி தடை செய்யப்படவில்லை. நீண்டகால நன்மைக்காக எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்களையும் அரசு கையகப்படுத்த முடியும். அதே நேரம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் அது இருக்க வேண்டும். அதாவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். பிற மத வழிபாட்டு தலங்களை கையகப்படுத்த முடியும் என்பதை போலவே, மசூதி இடத்தையும் கைப்பற்ற முடியும் என தீப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில்தான் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டால் ராம ஜென்மபூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற முக்கியமான வழக்கில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் ராமர் கோவிலை கட்ட முடியுமா, முடியாதா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply