தோண்ட தோண்ட தங்கம்; இன்ப அதிர்ச்சியில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர்

தோண்ட தோண்ட தங்கம்; இன்ப அதிர்ச்சியில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர்

பிரான்ஸ் நாட்டில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய ஆய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏராளமான தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரான்ஸ் நாட்டில் உள்ள நார்மண்டி என்ற பகுதியில் கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தங்கள நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு கூடுதலாக ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் பல ஆபரணங்களும் அதில் இருந்தன. இந்தப் புதையலின் மதிப்பு இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply