தோனி இயக்குனரின் அடுத்த டார்கெட் நயன்தாரா?
தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே, அடுத்ததாக நயன்தாரா நடித்த படம் ஒன்றை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளர்.
மம்முட்டி, நயன்தாரா நடித்த சூப்பர்ஹிட் மலையாள திரைப்படமான ‘புதிய நியமம்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை சமீபத்தில் வாங்கிய நீரஜ் பாண்டே, இந்த படத்தை இந்தியில் தயாரித்து இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்ற ஒன்லைன் கதையான இந்த கதைக்கு இந்திக்கு ஏற்ற வகையில் திரைக்கதையை எழுதி முடித்துள்ள நீரஜ், பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவரை நயன்தாரா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை அவர் அறிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது