தோல்வி பயத்தில் ஒதுங்கும் கமல்-தினகரன்: இவர்கள் எப்படி ஆட்சியை பிடிப்பார்கள்?
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அரசியல் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினர். 39 பாராளுமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத இந்த இரு கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என கமல்ஹாசன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடாததற்கு பல்வேறு காரணங்களை அவர்கள் கூறினாலும் தோல்வி பயமே உண்மையான காரணம் என்ன அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என்பதே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க வேண்டும். இதனை விடுத்து தோல்வி பயம் காரணமாக தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் காட்சிகள் நாளை எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது
2021ல் மக்கள் பேராதரவுடன் ஆட்சியை கைப்பற்றி மக்களாட்சிக்கு மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் விரைவாக முன்னேறி வருகிறது என்று கூறும் கமல்ஹாசன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்