த்ரிஷாவின் ‘பரமபத விளையாட்டு படத்தில் நயன்தாரா பட நடிகை
மக்கள் செல்வன் விஜய்சேஎதுபதியுடன் த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் த்ரிஷா நடித்த ‘பேட்ட’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் த்ரிஷா நடித்து வரும் படங்களில் ஒன்று ‘பரமபத விளையாட்டு’ திருஞானம் இயக்கி வரும் இந்த படத்தில் த்ரிஷாவுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் மானசா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து வருகிறார். இவர்தான் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்தவர் என்பதும் இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
24ஹவர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அம்ரிஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்