நகை வாங்கும்போது இதையெல்லாம் கவனித்தால் பணம் மிச்சமாகும் தெரியுமா?
திருமணங்கள், தெரிந்த அறிந்த நபர்களின் வீட்டு விசேஷங்கள், சோஷியல் சந்திப்புகள் மற்றும் இன்ன பிற விழாக்களின்போது பளிச்சென காதில், கழுத்தில், கையில் என வகைவகையாய் நகையணிதல் என்பது, ‘தொன்றுதொட்டு…’ எனச் சொல்லும் அளவிற்கு காலங்காலமாய் நம் கலாசாரத்தில் இழையோடிவரும் வழக்கமாகும்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வெள்ளைத் தங்கம் போன்ற உலோக ஆபரணங்களும், வைர, வைடூரிய, மரகதம் போன்ற நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட எண்ணிலடங்கா வடிவங்களிலான நகைகளும் நம்மூரில் கிடைக்கின்றன. அக்ஷய திரிதியை போன்ற நாட்கள் வந்தால்போதும், அணிகலன்களுக்கான கிராக்கியோ விண்ணை முட்டிவிடுகிறது! மங்களகரமான நாளன்று நகை வாங்கவேண்டும் என்கிற உந்துதலால், பலரும் சற்று நிதானித்து சிந்திக்காமல், கையிலிருக்கும் பணத்தையோ அல்லது நெடுநாளைய சேமிப்பையோ அப்படியே எடுத்துக்கொண்டு போய், குறுகிய நேரத்தில் பர்ச்சேஸை முடித்துவிடுகிறோம். வீடு, வாகனங்களுக்கு அடுத்து பெருந்தொகையை செலுத்தி நாம் வாங்குவது நகைகளைத்தான் என்பதால், ஆபரணங்களை வாங்கும் விஷயத்தில் சில முக்கிய அம்சங்களைத் தெரிந்துகொள்வதன்மூலம், செலவிடும் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைச் சேமிக்கலாம் என்கிறார் ‘Brilliant Cut’ ஜுவல்லரியின் உரிமையாளர் திரு. ராகுல் சோவாத்தியா.
நகைகளை எப்படிப் பார்த்து வாங்கவேண்டும்?
தரத்தை முதலில் கவனியுங்கள், அதில்தான் அடங்கியுள்ளது மொத்த சமாசாரமும். தூய தங்கத்தில் நகைகள் செய்யமுடியாததால், தங்கத்துடன் பிற உலோகங்கள் மிகச்சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. 22 கேரட் நகைகளில் தங்கத்தின் அளவு 91.6 சதவீதமாகும்; அதிகமாக நகைக்கடைகளில் விற்கப்படுவதும் இவைதான். இதை ஞாபகப்படுத்தும் விதத்தில்தான், ‘916 ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கத்தை வாங்குங்கள்’ என பி.ஐ.எஸ் எனப்படும் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் அறிவுறுத்திவருகிறது. 875, 750, 585 ஹால்மார்க் நகைகள், முறையே 916-க்கு அடுத்த தங்கத்தின் அளவைக் குறிக்கின்றன.
நகை வாங்குவோரைப் பெரிதும் குழப்புவது ‘செய்கூலி மற்றும் சேதாரம்’. செய்கூலி என்பது நகை செய்வதற்கான கூலி, இது கடைக்குக் கடை மாறுபடுகிறது. சேதாரம் என்பது நகை செய்யும்போது ஏற்படும் உலோகத்தின் இழப்பு. இந்த இழப்பை ஈடுகட்ட, நகை வியாபாரிகள் நேரடியாக வாடிக்கையாளர்களிடமே சேதாரத்தொகையை வாங்குகின்றனர். நகையைப் பொறுத்து 5% முதல் கிட்டத்தட்ட 30% வரைக்கூட சேதாரத் தொகை வசூலிக்கப்படுகிறது. செய்கூலி, சேதாரம் மற்றும் வரிப்பணம் போன்றவற்றில்தான் உபரியாக பணத்தை இழக்கிறோம். அதனால், 916 ஹால்மார்க் நகைகள், எந்தக் கடைகளில் குறைந்த செய்கூலி சேதாரத்தில் கிடைக்கிறது என்பதை முதலில் அறிந்துகொண்டு, பின்பு நகைவாங்க செல்வதுதான் சாதுரியம்.
வைர நகைகளைப் பொறுத்தவரை, ஐ.ஜி.ஐ (IGI), ஜி.ஐ.ஐ. (GII), எஸ்.ஜி.எல். (SGL) ஜி.எஸ்.எல். (GSL) போன்ற வைரங்களுக்கான சர்வதேச ஆய்வக தர நிர்ணயக் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, வைரங்கள் மற்றும் பிற ஆபரணக் கற்கள் உள்ளனவா எனப் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட வைரங்களைத்தான் ப்ரில்லியன்ட் கட் விற்பனை செய்கிறது.
”மொத்த வியாபாரம் மற்றும் நகைகளை நாங்களே சொந்தமாக செய்வதாலும், விலைக்குறைவு சாத்தியமாகிறது.”
சரி, ப்ரில்லியன்ட் கட் எப்படி 41% வரை குறைந்த விலையில் நகைகளை விற்பனை செய்கிறது?
பொதுவாக, நகைக் கடைகள் சில்லறை விற்பனை செய்வதால், நிர்வாக செலவு, வேலையாட்களின் கூலி போன்ற செலவுகளை கணக்கில்வைத்து, நகையின் விலையைக் கூட்டி விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ப்ரில்லியன்ட் கட் மொத்த வியாபரம் செய்வதாலும், நகைகளை நாங்களே சொந்தமாக தயாரிப்பதாலும், நேரடியாக எங்களிடம் நகை வாங்கும்போது, நம்பமுடியாத அளவிற்கு விலைக்குறைப்பு சாத்தியமாகிறது. மேலும், ’மெஷின் மேட்’ நகைகளை நாங்கள் விற்பதும் ஒரு காரணம். பாரம்பர்ய முறைப்படி கைகளால் செய்யப்படும் நகைகளுக்கு சற்றும் குறையாமல், கலையம்சத்தில் விளங்கும் இயந்திரங்களால் செய்யப்படும் நகைகளை, கணினி உதவியுடன் தயாரிக்கிறோம். இதனால், வேலைசெய்யும் நேரம் குறைகிறது மற்றும் அதிக அளவில் சேதாரமும் தவிர்க்கப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், பிற நகைக் கடைகளைவிட கிட்டதட்ட 36% வரை ப்ரில்லியன்ட் கட் தங்க நகைகளில் சேதாரம் குறைகிறது. எனவே, ப்ரில்லியன்ட் கட்-இல் லட்ச ரூபாய்க்கு நகை வாங்கினால், பிற கடைகளில் வாங்குவதைவிட, பல ஆயிரம் ரூபாய் மிச்சப்படுகிறது!
மேலும், இவ்வகையாக செய்யப்படும் நகைகள், கைவினை நகைகளைக் காட்டிலும் 50% லேசானதாகவும், வலுவானதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. ரத்தினக் கற்களையும் தேர்ந்த முறையில் நாங்களே வெட்டுவதால், வைர நகைகளுக்கு அதிகபட்சமாக 41% வரை சலுகை அளிக்கமுடிகிறது! விரும்பிய டிசைனில் நகைகளை ஆர்டர் செய்பவர்களுக்கு, நகையின் மாதிரியை முன்கூட்டியே காட்டி சம்மதம் பெறுவதால், வாங்குபவர்களுக்கும் மன திருப்தி ஏற்படுகிறது.
பழைய நகையை விற்பது குறித்து சொல்லுங்களேன்…
ஒருசில நகைக்கடைகள், புது நகைகளை விற்கும்போது ஒரு பேச்சும், பழைய நகைகளை வாங்கும்போது ஒரு பேச்சுமாய் செயல்படுகின்றன. ப்ரில்லியன்ட் கட்-இல் பழைய, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை சேதாரத் தொகையுடன் தற்போதைய தங்க விலைக்கு வாங்கிக்கொள்கிறோம், உருக்கு இழப்பீடாக வெறும் 1% மட்டும் பெற்றுக்கொள்வோம்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எவ்வாறு பெற்றீர்கள்?
இந்த வியாபாரத்தைப் பொறுத்தவரை கண்களால் பார்ப்பதுதான் நம்பிக்கையை உருவாக்கும்! முதலில், ப்ரில்லியன்ட் கட்-இல் இவ்வளவு சிக்கனமாக நகைகள் விற்கப்படுவது குறித்து வாங்குபவருக்கு ஒருவித தயக்கம் இருந்தாலும், ஏற்கனவே எங்களிடம் நகை வாங்கியவர்களின் பரிந்துரை மூலம் மேலும் வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர். திருமணங்களுக்கு நகை வாங்குபவர்களுக்கு ப்ரில்லியன்ட் கட், அதிக அளவில் பணத்தை மிச்சப்படுத்தி அற்புதமான நகைகளை வழங்குவது முக்கிய சிறப்பு. மெஷின்களால் செய்யப்படும் நகைகளின் வடிவம், பிசிறுகள் எதுவுமின்றி மிக நேர்த்தியாகவுள்ளதாக பல வாடிக்கையாளர்கள் கூறுவது எங்களை மேலும் உற்சாகப்படுத்திவருகிறது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகை வகைகளை இருப்பில் வைத்துள்ள வேப்பேரி- “ப்ரில்லியன்ட் கட் கோல்ட் & டைமன்ட் ஜுவல்லரி”யின் அலுவலகத்திற்குச் சென்று, நகை வாங்குதல் குறித்த சந்தேகங்களை நேரிலேயே தீர்த்துக்கொள்ளலாம், மேலும் விலை உயர்ந்த தரமான அணிகலன்களை நியாயமான விலையிலும் பெற்று பயன் பெறலாம்!