நக்மாவுக்கு ‘பாட்ஷா’வை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியவில்லை.இளங்கோவன்

நக்மாவுக்கு ஜல்லிக்கட்டு பற்றி எதுவும் தெரியாது: இளங்கோவன் கண்டனம்

22732-nagmaஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டு விலங்குகள் நலவாரியத்தின் சட்ட போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விழுந்துள்ளது.

அதை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

ஆனால் தேசிய கட்சிகளின் தமிழக நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகளின் கருத்துக்கள் வேறுபடுவது உண்டு.

அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை நக்மா ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளார்.

கடந்த வாரம் மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நக்மா ‘ஜல்லிக்கட்டு நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை. மாடுகளை வதைப்பதற்கு சமம்’ என்று கருத்து தெரிவித்தார்.

இதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, நக்மாவுக்கு ‘பாட்ஷா’வை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியவில்லை.

காங்கிரசை பொறுத்தவரை மன்மோகன்சிங், ஜெய்ராம் ரமேஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான எண்ணம் கொண்டுள்ளார்கள்.

காங்கிரசில் குஷ்புவும், நக்மாவும் தனி தனியாக இருக்கிறார்கள். குஷ்பு இளங்கோவனின் ஆதரவாளராக இருக்கிறார். இந்த நிலையில் நக்மாவை இளங்கோவன் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply