நடந்து செல்லும் கார்: ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்
அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் இந்த நடந்து செல்லும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும் என்றும், அதேபோல் மலை உச்சி மற்றும் கட்டட இடிபாடுகளில் நடந்து செல்லும் என்றும், மீட்பு பணிக்கு மட்டுமின்றி மற்ற வழக்கமான கார் போல் சாலைகளிலும் இந்த கார் ஓடும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற கார்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும். இந்த காரை வடிவமைப்பது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.