நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! சரண் அடைவது எப்போது?

நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! சரண் அடைவது எப்போது?

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொகுசுக்கார் இறக்குமதி வழக்கில் நேற்று இரண்டு ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று அல்லது இன்று நீதிமன்றம் முன் சரண் அடைய வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டாலும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரி அனுமதி கேட்டாலும், அந்த மனு பரிசீலனைக்கு வரும் வரை அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் நடராஜன் மீண்டும் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அவர் நீதிமன்றம் முன் சரண் அடைவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply