நடிகரை திருமணம் செய்ய விரும்பவில்லை: பிரபல நடிகை
அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடான் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் காஜல் அகர்வாலின் திருமணத்திற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:
திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார்.
எப்படியும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் திருமணம் என்பதால் வரும் 2020ஆம் ஆண்டிற்கு பின்னரே காஜல் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.