நடிகர்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்யவில்லை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து நடிகர்கள் ஆலோசனை சொல்ல தேவையில்லை என்றும் அதற்கு பதிலாக நிவாரண உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நிவாரணம் வழங்குவதாக நடிகர்கள் பாசாங்கு செய்வதாகவும் நடிகர்கள் தங்களுடைய சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்யவில்லை என்றும் அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் உதவியை தாங்கள் செய்வதாக கூறி கொள்வதாகவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
முன்பெல்லாம் வெள்ளம், சுனாமி வந்தபோது நடிகர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதியாக பணம் அளிப்பார்கள். அந்த பணம் உரியவர்களுக்கு போய்ச்சேரும், ஆனால் இப்போது அவர்களே நிவாரண உதவி செய்வதாக கூறிக்கொள்கின்றனர் என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.