நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திடீர் உத்தரவு
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 3644, ஆயுட்கால உறுப்பினர்கள் 1328, தொழில்முறை உறுப்பினர்கள் 1840 என மொத்தம் 3173 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்ததால் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சற்றுமுன் நடிகர்கள் விஷால், கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் தமிழக கவர்னரை சந்தித்து நடிகர் சங்கம் தேர்தல் மற்றும் பாதுகாப்பு பற்றியும் பேசிய நிலையில் தேர்தலை நிறுத்தும் இந்த உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது