நடிகர் சங்க தேர்தல் இடமாற்றம்: நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்க தேர்தல் சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தேர்தல் நடத்தும் இடம் எது என்பதை முடிவு செய்து இன்று நடிகர் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது