நடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்?

நடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்?


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுமார் 50,000 பேர் கூடியிருந்த அரங்கில் ராஜ நடை போட்டு வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்தினார்

இந்த உரையில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை, ஜம்மு காஷ்மீரின் 370 ஆவது பிரிவை நீக்கியது ஏன் என்பது குறித்த விளக்கம், இந்தியாவின் வளர்ச்சி எதிர்கால திட்டங்கள் ஆகியவை பற்றி பல விஷயங்களை அவர் விளக்கமாக கூறினார்

இந்த நிலையில் இந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க தலைவர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும், அமெரிக்கர்களும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து உற்சாகப் படுத்தினர். இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள முக்கிய தொலைக்காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்தன. பல மில்லியன் கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து இந்திய பிரதமரை பாராட்டி வருகின்றனர்

ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டும் வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்ச்சியை வெளியிட்டன. நடிகர் சங்க தேர்தலை காலையிலிருந்து இரவு வரை நேரடி ஒளிபரப்பு செய்த தமிழ் ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை தலைப்புச் செய்தியாக கூட போடாமல் இரண்டு வரி செய்தியாக வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடி மீது தமிழகத் தலைவர்களுக்கும் தமிழக ஊடகங்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நம் நாட்டின் பிரதமர் ஒருவர் அமெரிக்காவில் போற்றப்படும் தலைவராக இருக்கும் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி இருக்கவேண்டும் என்று நடுநிலையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply