நடிகையிடம் நைசாக பேசி விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற மாமியார்: திடுக்கிடும் தகவல்
ஒரிசா மாநிலத்தில் துணை நடிகையாக இருந்து வரும் நடிகை ஒருவரை அவரது மாமியார் விபச்சாரத்திற்கு தள்ள முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒரிய மொழி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து அவருக்கும் அவருடைய மாமியாருக்கும் ஒத்துவரவில்லை. இதனால் நடிகையை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று மாமியார் முடிவு செய்தார்
இந்த நிலையில் தனது மருமகளை ஒரு விருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை ஒரு ஆடம்பர விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு மருமகளுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர் ஒரு விபச்சார புரோக்கரிடம் ஒரு பெரிய தொகை வாங்கி மருமகளை அனுப்பியதாக தெரிகிறது
இந்த நிலையில் திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த அந்த நடிகை, அந்த விபச்சார புரோக்கரையும், மாமியாரையும் தாக்கி தப்பியோடி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாமியாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள விபசார புரோக்கரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது