நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்
பிரபல நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் அமலாபால் தந்தை இன்று மாலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவரது தந்தையின் மறைவு அவருக்கு பெரும் அதிர்ச்சியாகவே கருதப்படுகிறது