நடிகை காஜல் அகர்வாலின் வயது 67: தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு தகவல்

நடிகை காஜல் அகர்வாலின் வயது 67: தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு தகவல்

ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் ரேசன் கார்டு கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட்கார்டில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதால் போலி ரேசன் கார்டுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்கார்டுகளில் குடும்பத்தலைவர்கள் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப்படங்கள் சில ஸ்மார்ட்கார்டுகளில் இருப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன்

இந்த நிலையில் சேலம் பகுதியை சேர்ந்த காவேரி, கோமாளிவட்டம் என்ற ஊரில் வசிக்கும் 67 வயது சரோஜா பெரியதம்பி என்பவரின் ஸ்மார்ட்கார்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வாலுக்கு 67 வயதாகிவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply