நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை: தமிழிசை
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாக போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்றும் வேண்டுமென்றால் அவரை பற்றி டெல்லியில் புகார் சொல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துவிட்டு அவர் கட்சியில் இருந்து அன்றே விலகிவிட்டதாகவும், அவருக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் பதில் கூறியுள்ள காயத்ரி, ‘தான் ஆன்லைன் மூலம் பாஜகவில் இணைந்ததாகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமை இல்லை என்றும், தான் பிரதமர் மோடிக்காகவே கட்சியில் இருப்பதாகவும், தமிழக தலைவர்களுக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.