பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை சரண்யா சசி மூளை புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை காரணமாக நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோய் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா சசிக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்
சரண்யா சசி மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சரண்யா சசி தமிழில் ச்சை என்னும் காத் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு சில தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது