நன்னடத்தை அடிப்படையில் முன்னதாகவே விடுதலையாகும் சசிகலா? அதிமுகவில் பரபரப்பு

நன்னடத்தை அடிப்படையில் முன்னதாகவே விடுதலையாகும் சசிகலா? அதிமுகவில் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா, நன்னடத்தை அடிப்படையில் ஓராண்டுக்கு முன்னதாகவே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அதிமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது இரண்டரை வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்து முடித்துவிட்டார். இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் சசிகலா ஓராண்டுக்கு முன்பே, அல்லது இந்த ஆண்டு இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply