நபார்டு வங்கியில் 85 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
‘நபார்டு வங்கி’ என அழைக்கப்படும் இந்திய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் மும்பையில் உள்ள நபார்டு வங்கியில் 85 டெவலப்மென்ட் அசிஸ்டன்ட் (Development Assistant, Development Assistant (Hindi)) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/DA/2016-17
பணி: Development Assistant, Development Assistant (Hindi)
காலியிடங்கள்: 85
சம்பளம்: மாதம் ரூ.8,040 – 201,100
வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர்கள் இளநிலை பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
மேலும் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/final%20advt%2030%20Aug%2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.