நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?!

நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?!
3.3
1. காலையில வண்டியைத் துடைச்சு, பெட்ரோல் எல்லாம் செக் பண்ணி எடுத்துட்டு வந்தா, பீக் அவர்ல நடுரோட்டில் நின்னுபோகும். காரணமே தெரியாம முழிக்கும்போது தோணும், ‘நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?!’
 
2. ஊரே அசால்ட்டா ரோட்டைக் கடந்துட்டு இருக்குறப்போ, நாம காலெடுத்து வைக்கும்போதுதான் ஒருத்தர் வண்டியோட வந்து ஜஸ்ட் மிஸ்ல பிரேக் அடிப்பார். ஏன் ஆபிஸர்?!

 
3. வீட்டைவிட்டுக் கிளம்பி ரெண்டாவது பஸ் ஸ்டாப் வந்து சேரும்வரை ஒழுங்கா இருக்குற செருப்பு, சப்வே ஏறி, இறங்குறப்போ தைக்கக் கடையே இல்லாத முட்டுச்சந்தில் அறுந்துபோகும். கையிலயும் எடுத்துட்டுப்போக முடியாம, தைக்கவும் வழி இல்லாம, தூக்கிப் போட்டுட்டு வெறுங்காலிலும் நடக்க முடியாம… காலறு நிலை அது!
 
4. ஆர்டிஓவை தாஜா பண்ணி லைசன்ஸ் வாங்கினவங்க எல்லாம்கூட,  வண்டியை வளைவுல அசால்ட்டா திருப்பி ஓட்டிட்டுப் போறப்போ, 8 போட்டு லைசன்ஸ் வாங்கின நாம மட்டும் இறங்கி, வளைச்சு, ஆபிஸ் போறதுக்குள்ள மூன்றாம் உலகப்போரே தொடங்கி முடிஞ்சு போயிடும். கொடுமை பெருக்கல் கொடுமை!
 
5. என்னதான் கவனத்தையெல்லாம் திசை திருப்பி, மனசை ஒருநிலைப்படுத்தி கவனிச்சாலும் குக்கர் எத்தனை விசில் அடிச்சுது அப்படீங்கிறது மட்டும் மண்டையில நிக்கவே நிக்காது. ஏன் சாமி ஏன்?!

 
6. பஸ்ல அடிச்சுப்பிடிச்சு ஏறி கூட்டத்துக்குள்ள நுழைஞ்சப்புறம்தான், டிக்கெட்டுக்கு சில்லரையை முன்கூட்டியே ஹேண்ட்பேக்ல இருந்து எடுத்து கையிலவெச்சுக்காம விட்டது ஞாபகம் வரும். யார் மேலயும் இடிக்காம, பேக்ல இருக்குற பொருளைக் கீழேவிட்டுடாம, சில்லரையைச் சரியா எடுக்கிறதே… சர்க்கஸ் சாகசம்தான்!
 
7. நைட் தூங்குறவரை மொபைல்லயே குடித்தனம் நடத்திட்டு, பேட்டரியில் சிவப்பு கோடுகாட்டி செல்போன் அழுததும் சார்ஜரில் போட்டுட்டு, காலையில மொபைலை எடுக்கும்போதுதான் தெரியும்… ஸ்விட்சையே ஆன் பண்ணலைனு. யார நாமும் குத்தம் சொல்ல?!
 

 
8. கல்யாணத்துக்கு முன்னாடி செல்போனை உள்ளங்கைக்குள்ளேயே அடைகாத்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் மொபைலையே மறந்துட்டு ஆபீஸ் போறதெல்லாம் நடக்கும். டெஸ்க்கில் உட்கார்ந்ததுக்கு அப்புறம், கணவர் வீட்டுக் கதவை ஒழுங்கா பூட்டினாரானு கேட்க நினைக்கிறப்போதான், செல்போன் வீட்டுல இருக்கிறதே ஸ்ட்ரைக் ஆகும். மாண்புமிகு மறதி!
 
9. புடவை கட்ட ஆசைப்பட்டு, கணக்கில்லாம ஊக்குகளை குத்தி செட் பண்ணி, ‘ஐ… அழகா இருக்கே’னு ஒரு நாலு பேர் பார்த்துட்டுப் பாராட்டும் தருணத்துல, உள்ளே எங்கேயோ ஒரு ஊக்கு கழண்டுக்கும். வெளிய எதுவும் காட்டிக்காம, உள்ள சரிபண்ணவும் முடியாம, இன்ச் அசையக்கூட அச்சப்பட்டு நிக்கும்போதுதான்… சுடிதார், ஜீன்ஸுக்கு எல்லாம் கோயில்கட்டிக் கும்பிடத் தோணும். புடவை ஆசை தப்பா?!
 
10. ஆபிஸ்ல ரொம்பத் தீவிரமா மீட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, ரெஸ்ட்ரூம் நம்மை அழைக்கும். கலந்துரையாடலை சரியா கவனிக்கவும் முடியாம, அவங்க முன்னிலையில எழுந்துபோகவும் முடியாம உட்கார்ந்திருக்கிற ஹேங் ஓவர் மோடு… ‘நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?!’

Leave a Reply