‘நமோ டி.வி.’ குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் ‘நமோ டிவி’ என்ற அரசியல் கட்சி டிவிக்கு அனுமதி அளித்தது சட்டவிரோதம் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தது
இந்த நிலையில் நமோ டி.வி. சேனல் குறித்து விளக்கம் அளிக்க மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாருக்கு விளக்கம் தர வேண்டும் என்றும் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது