நம்பிக்கை வாக்கெடுப்பு: காலஅவகாசம் கோரினார் குமாரசாமி
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில கவர்னர் அறிவுறுத்தியுள்ள நிலலியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் முதலமைச்சர் குமாரசமி காலஅவகாசம் கோரினார் குமாரசாமி
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை நடத்த வேண்டியுள்ளதால் காலம் அவகாசம் தேவை என்றும், சபாநாயகரை சந்தித்து 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் முதலமைச்சர் குமாரசாமி கேட்டார்.
முதலமைச்சரின் கோரிக்கைக்கு சபாநாயகர் ஒப்புக்கொள்வாரா? சபாநாயகர் ஒப்புக்கொண்டாலும் அதை கவர்னர் அனுமதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்