’நம்ம வீட்டு பிள்ளை’ திரைவிமர்சனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
‘பாசமலர்’, கிழக்கு சீமையிலேயே உள்பட தமிழ் சினிமாவில் வந்த பல அண்ணன் தங்கை படங்களில் இதுவும் ஒன்று. சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர்களுக்கு ஒரே தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ். தங்கையை தலைமேல் தூக்கி வைத்து ஆடும் சிவகார்த்திகேயன், அவருக்கேற்ற ஒரு மாப்பிள்ளையை பார்ப்பதும், அதற்கு பங்காளிகள் கொடுக்கும் எதிர்ப்புகளும், எதிர்ப்பை முறியடித்து தங்கைக்கு அவர் எப்படி திருமணம் செய்து வைக்கின்றார் என்பதுதான் கதை
கடந்த சில படங்களில் ஆக்சன் ஹீரோவாக பில்டப் செய்த சிவகார்த்திகேயன் மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் லெவலுக்கு தன்னுடைய காமெடி பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இதே பாணியில் சென்றால் அவருக்கு வெற்றியும் உறுதி
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பின்னி பெடலெடுத்துவிட்டார். கடைசி அரை மணி நேரம் சான்ஸே இல்லை. இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என ஏங்க வைத்துவிட்டார்
படத்தில் இருக்கும் டூயட் பாடல்கள் நடிப்பதற்காக ஹீரோயின் அனு அகர்வாலை தேர்வு செய்துள்ளனர். பாரதிராஜா, ஆர்கே சுரேஷ், சமுத்திரக்கனி என இந்த படத்தில் ஒரு பெரிய கூட்டமே உள்ளது. அனைவரையும் சரியான அளவில் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். பெரிய நட்சத்திர கூட்டம் இருப்பது இந்த படத்திற்கு பிளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் உள்ளது
டி இமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்
இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் ஒரு செண்டிமெண்ட் படத்தை பிழிந்தெடுத்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் இரண்டாம் பாகமோ என்று ஒருசில நேரங்களில் நினைக்க தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள். பல அண்ணன் தங்கை படத்தில் பார்த்த காட்சிகள், இந்த காலத்திற்கு ஏற்றவாறு புதுமையான காட்சிகள் இல்லை என்றாலும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதில் சந்தேகம் இல்லை
ரேட்டிங்: 4/5