நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தற்போது `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.