நரேந்திரமோடி படத்தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

நரேந்திரமோடி படத்தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு திரைபடமான பி.எம்.நரேந்திரமோடி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்காக பி.எம்.நரேந்திரமோடி என்ற படத்தை வெளியிடுவதாகவும், இந்த படம் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வெளிவருவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன

இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகாரை தொடர்ந்து பி.எம்.நரேந்திரமோடி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, பி.எம்.நரேந்திரமோடி படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட 2செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply