நர்மதா நதியில் ஆயிரக்கணக்கில் பழைய ரூ.500 நோட்டுகள்: அதிர்ச்சியில் ஆர்பிஐ

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கில் பழைய ரூ.500 நோட்டுகள்: அதிர்ச்சியில் ஆர்பிஐ

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாயும் நா்மதா நதியில் மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் மிதந்தது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பா் மாதம் திடீரென 500, 1000 ரூபாய் தாள்கள்களுக்கு இனி மதிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தார் இதனைத் தொடா்ந்து கடந்த புதன் கிழமை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னா் 0.7% பணம் மட்டுமே திரும்ப வரவில்லை. மற்ற தொகை கணக்கில் கொண்டுவரப்பட்டு விட்டதாக தொிவித்தது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் ஷினோா் என்ற பகுதியைச் சோ்ந்த சிலா் நா்மதா நதியில் குளிப்பதற்காக சென்றுள்ளனா். அப்போது மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் நதியில் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனா். சற்று நேரத்தில் அதிகப்படியான தாள்கள் மிதக்கத் தொடங்கியது. தகவல் அறிந்த கிராம மக்கள் இந்த நிகழ்வை ஆச்சரியத்துடன் கண்டுகழித்துக் கொண்டிருந்தனா்.

இதனைத் தொடா்ந்து ராமன் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அதற்குள் ஆற்றில் மிதந்த ரூபாய் தாள்கள் மதிப்பில்லாத காரணத்தால் அவற்றை கிராம மக்கள் எடுத்து கரையில் போட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனா்.

பின்னா் காவல் துறையினா் அவற்றை கணக்கிட்ட போது 36 ஆயிரம் ரூபாய் தாள்களும், இரண்டு 500 ரூபாய் தாள்களும் இருந்ததாக தெரிகிறது. இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave a Reply