நல்ல ஜிம்மை தேர்ந்தெடுப்பது எப்படி ?
ஒவ்வொரு ஏரியாவிலும் பத்து பதினைந்து ஃபிட்னெஸ் சென்டர்கள் இருக்கின்றன. அதில் எது நல்ல ஃபிட்னெஸ் சென்டர்னு எப்படி தேர்ந்தெடுப்பது? இதுதான் ஃபிட்னெஸ் ட்ரெயினிங் செல்பவர்களின் இன்றைய முதல் கேள்வி. இதற்கான பதிலை தருகிறார், ‘ ஃபிட்னெஸ் ஒன் ‘ ஃபிட்னெஸ் சென்டரின் எம்.டி அருண் கதிரேசன்..
1. உங்கள் வீட்டிலிருந்து அதிகபட்சம் 3 கிலோமீட்டருக்குள் இருக்கும் ஃபிட்னெஸ் சென்டரில் சேருவதுதான் நல்லது. இதைவிட அழகாவும் வசதியாகவும் இருக்கிறது என 10 கிலோ மீட்டர் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஃபிட்னெஸ் சென்டரில் சேர்ந்தால் தினமும் தொடர்ந்து போய்வருவதில் சிரமம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் சோம்பல் காரணமாக ஜிம் செல்வதையே நிறுத்திவிடுவீர்கள்.
2. ஃபிட்னெஸ் சென்டரின் உள்பகுதி சுத்தமாக இருக்கிறதா, குறிப்பாக ஃபிட்னெஸ் சென்டரின் தரைப்பகுதி அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். குளிப்பதற்கான ஷவர் ரூம், உங்கள் உடமைகள் வைப்பதற்கான லாக்கர் ரூம் போன்ற வசதிகள் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. புதிதாக ஜிம்முக்கு செல்பவர்கள், எக்யூப்மெண்ட்களை எப்படி யூஸ் செய்வது என தெரியாமல் திணறும்போது, உடனடியாக உதவுவதற்கு, பயிற்சியாளர்கள் இருப்பது அவசியம். குறைந்தபட்சமாக பத்துபேருக்கு ஒரு ட்ரெயினர் என்பது வசதியானது. அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஜிம்மில் தேவையான அளவில் ட்ரெயினர்கள் இருக்கிறார்களா என்பதை தவறாமல் செக் செய்யவும்.
4. தரமான பயிற்சியாளர்கள் இருந்தால்தான் உங்களது உடல்நிலைக்கு தக்கபடி பயிற்சிபெற முடியும். அதனால் சான்றிதழ் பெற்ற சிறந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதை சோதித்துக் கொள்ளவும்.
5. நம் அனைவருமே, அலுவலக நேரம் இல்லாத அதிகாலை அல்லது அலுவலக நேரம் முடிந்தபின் மாலை என பணிச்சுமை இல்லாத சமயத்தில்தான் ஃபிட்னெஸ் சென்டருக்கு செல்வதற்காக நேரம் ஒதுக்குவோம். அதனால் அந்த சமயங்களில் வரும் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு எக்யூப்மெண்ட்கள் இருக்கிறதா என செக் செய்யுங்கள்.
6. உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல், ஜென்ரல் ஃபிட்னெஸ், டோனிங், தொய்வான சதைப்பகுதியை இறுக்கம் செய்வது என பல வகையான சர்வீஸ்கள் தருகிறார்களா என்பதையும் பார்த்து, ஃபிட்னெஸ் சென்டரை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
7. ஃபிட்னெஸ் சென்டரின் பராமரிப்பு, வாடிக்கையாளரை அணுகும்விதம், பயிற்சி பெறுபவர்களை உற்சாகப் படுத்தி பயிற்சி செய்ய வைப்பது என, நீங்கள் தேர்ந்தெடுக்ககூடிய ஃபிட்னெஸ் சென்டரை பற்றிய தகவல்களை, அங்கு ஏற்கனவே பயிற்சிபெறும் நபர்களிடம் கருத்து கேட்டபின் முடிவெடுங்கள்.
8. இது தவிர்த்து கூடுதல் வசதிகளாக, ஜூஸ், சிறுதானியம், சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கிறதா ? ஆண் பெண் இருவருக்குமான ஜிம்களில், பெண்கள் ஒர்க் அவுட் செய்வதற்கு தனி இடம் உள்ளதா எனவும் செக் செய்து கொள்ளலாம்.