நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக கடிதம் – தகவல்கள் கேட்கிறது மத்திய அரசு

நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக கடிதம் – தகவல்கள் கேட்கிறது மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

Leave a Reply