நள்ளிரவில் உதவி ஆய்வாளர் அனுப்பிய ஆபாச வீடியோ: இளம்பெண் அதிர்ச்சி
போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் நள்ளிரவில் இளம்பெண் ஒருவருக்கு ஆபாச வீடியோவை அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவரை வழிமறித்து ஆவணங்களை கேட்டுள்ளார்
தகுந்த ஆவணங்கள் இருந்தும் அந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், அவரிடம் விசாரணை செய்து விட்டு செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டாராம்
இதன் பின்னர் தினமும் அந்த இளம்பெண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி கொண்டிருந்த உதவி ஆய்வாளர், நேற்று முன்தினம் ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியதாக தெரிகிறது
இதனை அடுத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உறவினர்களிடம் முறையிட, உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த உதவி ஆய்வாளரை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்
இந்த விவகாரம் காவல்துறையின் மேலதிகாரிகளுக்கு தெரியவர உடனடியாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
ஒரு சாதாரண பொதுமக்கள் இதே தவறை செய்தால் அவருக்கு தண்டனை கொடுக்கும் நிலையில் அதே தவறை போலீசார் செய்தால் வெறும் இடமாற்றம் மட்டும்தானா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை