நள்ளிரவில் உள்ளாடையுடன் திரியும் மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு

நள்ளிரவில் உள்ளாடையுடன் திரியும் மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த போரூர் அருகே நள்ளிரவில் உள்ளாடைகளுடன் திரியும் மர்ம நபர் ஒருவர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை அந்த பகுதியில் உள்ள ஒருவர் ஆய்வு செய்தபோது அதில் முகத்தை மூடியபடி ஜட்டி மற்றும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதிக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த மர்ம நபர், கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிட்டு அதன்பின்னர் உள்ளே நுழைவது போன்றும், அந்த நபருடைய பின்பகுதியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததும் அந்த வீடியோவில் தெரிய வந்தது

தனது முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க உறுதி கூறியிருப்பதாகவும் அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply