நவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ!
ஜப்பானைச் சேர்ந்த மிட்ஷுபிஷி நிறுவனம், எஸ்யூவி கார்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றது. தனது புதிய 3.2L DI-D டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட லக்ஸூரி எஸ்யூவியான மான்டெரோ GLS காரை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது. எனவே இந்தியாவில் சண்டிகரில் முதன்முறையாகவும், இரண்டாவதாக கோவையிலும் ப்ரீலான்ச் டிஸ்ப்ளே (PRE-LAUNCH DISPLAY) முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. காரின் டெக்னிக்கல் விபரங்களைப் பற்றி சேல்ஸ் ஆபிசர் அ.பாலசுப்ரமணியம் அளித்த விபரங்களை பார்ப்போம்;
*நீ/அ/உ: 4900/1875/1900 மிமீ *வீல்பேஸ்: 2780மிமீ
*இன்ஜின்: 3200சிசி,4 சிலிண்டர் *பவர்: 141KW@3800rpm
*டார்க்: 441Nm@2000rpm *கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடூ ஆட்டோமெட்டிக்
*பெட்ரோல் டேங்க் அளவு: 88 லிட்டர் * இன்ஜின் தொழில்நுட்பம்: Electronic Common Rail Direct Injection (CRDI)
இந்தியாவில் மிட்சுபிஷி மான்டெரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை, 68,45,480 லட்சம் ஆகும் (எக்ஸ் ஷோரூம் விலை). ஜப்பானில் இருக்கும் மிட்ஷுபிஷி நிறுவனத்தின் தொழிற்சாலையில் கார் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டு, இங்கு CKD முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. முன்பு இருந்த மாடலுடன் ஒப்பிடும்போது, காரின் வெளித்தோற்றத்திலும்-உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
*இந்த காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் பின்வருமாறு;
1. ஆட்டோ ஹைபீம் கண்ட்ரோலர் (AUTO HIGH BEAM CONTROLLER)
காரை சுரங்கப்பாதையிலோ அல்லது இருண்ட சாலையில் ஓட்டிச் செல்லும்போது, AUTO HIGH BEAM CONTROLLER சென்சாரின் தூண்டுதலால் முகப்பு விளக்குகளின் ஒளி அளவை தானாகவே மாற்றிக்கொள்ளும். இதனோடு விண்ட்ஷீல்ட் ரெயின் சென்சார் உள்ளது.
2. ப்ரீமியம் செக்யூரிட்டி அலாரம் சிஸ்டம் (PREMIUM SECURITY ALARM SYSTEM)
காரை பார்க்கிங் செய்துவிட்டு குழந்தைகளை தூங்கவிட்டோ, மறதியில் விட்டுச் சென்றாலோ அல்லது காரை உபகரணங்களால் தூக்கினாலோ, காரின் அசைவினால் மோஷன் சென்சார் (Motion Sensor) செயல்படத் துவங்கி ஒலி எழுப்பும்.
3. தனியே கழட்டக்கூடிய கடைசி வரிசை இருக்கை (Detachable 3rd Row Seat)
பின்பக்க சீட்டினை வசதிக்கேற்ப மடக்கிவைத்துக் கொள்ளலாம். 7 நபர்கள் வசதியாக அமர்ந்து செல்லலாம். முன்பக்க சீட்டுகள் இரண்டும் பவர் அசிஸ்டட் (Power Assisted) வசதி கொண்டது. எட்டு விதமான அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொள்ளலாம். மேலும் வெளியே இருக்கும் வெப்பநிலையை பொருத்து, முன்பக்க சீட்டுகளின் அடிப்பகுதியின் வெப்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் ஸ்டீயரிங் வீலில் க்ரூஸ் கண்ட்ரோல், ஆடியோ கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் ஏர் கண்டிஷனர், பவர் டில்ட்டிங் சன்-ரூப், ராக்ஃபோர்ட் ஆடியோ சிஸ்டம் (Rockford Audio System), கிளாஸ் ஆண்டெனா, அலுமினியம் பெடல், டூயல் ஸ்டேஜ் SRS Airbags, 5Speed AT கியர்பாக்ஸ், ஸ்போர்ட்ஸ் மோடு உடனான 4WD சிஸ்டம் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. முன்பு இருந்த காரில் 17 இன்ச் டயர் இருந்த நிலையில், தற்போது அது 18 இன்ச் டயராக மாற்றப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 202 மிமீயில் இருந்து, 235 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5.7 மிமீ டர்னிங் ரேடியஸ் காரணமாக, காரைத் திருப்புவது வசதியாக உள்ளது. பெர்ஃபாமென்ஸ் அருமையாக இருக்கும் வகையில் இன்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது. Warm White Mica, White Solid, Black Mica, Eiger Grey Metallic, Cool Silver Metallic, Quartz Brown Metallic, Platinum Beige Metallic போன்ற ஏழு வகையான வண்ணங்களில் வெளி வர இருக்கிறது மிட்சுபிஷி மான்டெரோ. அடுத்த ப்ரீலான்ச் டிஸ்ப்ளே கொச்சியில் உள்ள ஷோரூமில் நடைபெறும் எனவும், இந்தியக் கார் சந்தையில் நவம்பர் மாதம் முதல் விற்பனையை துவக்குவார்கள் என மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.