நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடக்கம்!

நவம்பர் 1-ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2020-21 கல்வி ஆண்டுக்கான கல்லூரி அட்டவணையும் வெளியாகியுள்ளது வெளியீடு

முதலாமாண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான அட்டவணை தயாரிப்பு குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டதாகவும், இதன்படி நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் அக்டோபர் 10ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் எனவும் புதிய அட்டவணைக்கு யூ.ஜி.சி ஒப்புதல் அளித்துள்ளது எனவும் செய்தி வெளிவந்துள்ளது

Leave a Reply