நாகலாந்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

நாகலாந்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

நாகலாந்தில் மியான்மர் எல்லையில் இன்று மாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு 5.4-ஆக பதிவாகியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து அச்சத்துடன் வெளியே ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை. இருப்பினும் இன்னும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் கட்டிடத்திற்குள் செல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply