நாகலாந்து கவர்னர் திடீர் ராஜினாமா. மோடி அரசு மீது அதிரடி புகார்

Vakkom Purushothaman
நாகாலாந்து ஆளுநர் பதவியை வைக்கம் புருஷோத்தமன் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியாரசு மிசோரம் மாநில ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமனை, திடீரென நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்த திடீர் இடமாற்றத்தால் அதிருப்தி அடைந்த வைக்கம் புருஷோத்தமன், தனது நாகாலாந்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று அனுப்பியுள்ளார்.

தன்னிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு இடமாற்றம் செய்ததால் தான் அதிருப்தி அடைந்ததாகவும், அதன்காரணமாகவே தனது கவர்னர் பதிவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  தனது ராஜினாமாவை மத்திய அரசிடம் ஏற்கனவேதெரிவித்து விட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, தீவிரமாக கட்சி அரசியலில் இறங்கப்போவதாகவும், ஆனால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கேரளாவின் மூத்த அரசியல் தலைவரான வைக்கம் புருஷோத்தமன் ஏற்கனவே மாநில அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply