நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு- ராஜேந்திர பாலாஜி
கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு?
என்னை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்? என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு என ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.